• May 02 2026

நான் முதலமைச்சரானால் முதலில் இதைத்தான் செய்வேன்! - நடிகை கீர்த்தி ஷெட்டி அதிரடி முடிவு

shali / 4 weeks ago

Advertisement

Listen News!

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி ஷெட்டி. தனது நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் இவர், சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அந்த பேட்டியில், “நீங்கள் முதல்வராக இருந்தால் முதலில் எந்த விஷயத்தில் கையொப்பமிடுவீர்கள்?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கீர்த்தி ஷெட்டி, “நம்ம நாட்டில் குற்றங்களுக்கு போதுமான தண்டனைகள் இல்லை என்று நான் உணர்கிறேன். அதனால், அந்த குற்றங்களுக்கு இன்னும் கடுமையான தண்டனைகள் கொண்டு வர விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

அவரது இந்த பதில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக நடிகர்கள் அரசியல் தொடர்பான கேள்விகளில் மறைமுகமாக பதிலளிக்கும் சூழலில், கீர்த்தி ஷெட்டியின் நேர்மையான மற்றும் தைரியமான பதில் கவனம் பெற்றுள்ளது.

சமூக பிரச்சனைகள் குறித்து தனது கருத்தை வெளிப்படையாக பகிர்ந்திருப்பது ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. 

Advertisement

Advertisement