• Apr 26 2024

விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க நான் தான் பொருத்தமாக இருப்பேன்- ஓபனாகப் பேசிய ராம்சரண்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் ராம்சரண். இவர் மற்றும் ஜுனியர் என்டியாருடன் சேர்ந்து நடித்திருந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருதும்  கிடைத்தது.

இந்த நிகழ்வில் ராம்சரண் தன்னுடைய மனைவியுடன் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.ராம் சரண் தன்னுடைய நடிப்பில் மட்டுமல்லாமல், கலந்து கொள்ளும் ஒவ்வொரு நிகழ்விலும் பிரத்யேகமான ஸ்டைலுடன் கூடிய ஆடையை அணிவதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் இருக்கின்றார். 


மேலும் தற்பொழுது ஷங்கர் இயக்கத்தில் RC15 என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் ராம் சரண் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஐஏஎஸ் அதிகாரியாக வரும் ராம்சரண், நடுத்தர வயது முதல் வயதான கேரக்டர் வரை பல விதமான கெட்டப்போட்டுள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இன்னும் படம் குறித்த எந்தவிதமான அப்டேட்டையும் படக்குழு வெளியிடாததால் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் ராம்சரண் கூறியிருப்பதாவது: தொடர்ந்து பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன்.


இதுவரையில் விளையாட்டு தொடர்புடைய படங்களில் நடிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். இது போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்று கூறியுள்ளார். உடனே, விராட் கோலியின் ரோலில் நடிக்க விருப்பமா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அற்புதம், அவர்தான் ஊக்கத்தை அளிக்க கூடியவர். ஒரு வாய்ப்பு கிடைத்தால், அவரைப் போன்று நடிப்பது அருமையாக இருக்கும். நான் கோலியைப் போலவே இருப்பதால் இது பொருத்தமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement