• Mar 26 2023

''தனிமை சிலரை கெட்டவங்களாக மாத்திவிிடும். ஆனா, என்னை....'' – இறப்பதற்கு முன் ரகுவரன் மனம் உருகி அளித்த பேட்டி!

Jo / 6 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  80ஸ் காலகட்டம் தொடங்கி தூக்கி காலகட்டம் வரையிலான ரசிகர்களுக்கு ரகுவரன் பற்றி நன்றாக தெரிந்திருக்கும். நைன்ட்டீஸ் ரசிகர்களுக்கு நடிகர் ரகுவரன் ஒரு மிரட்டலான வில்லனாக மிகவும் பிரபலமாக இருந்தார்.

ரகுவரன் கடந்த 1996 ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷி வரன் என்ற குழந்தையும் பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரித்து விட்டார்கள். ரகுவரன் மற்றும் ரோகிணி பிரிந்த நான்கு வருடங்களில் நடிகர் ரகுவரன் கவனிக்க ஆளில்லாமல் தனியாகத்தான் வசித்து வந்தார்.

 பின்னர் 2008 ஆம் ஆண்டு சர்க்கரை நோய் காரணமாக நடிகர் ரகுவரன் உயிர் பிரிந்தார் இவரது மரணத்திற்கு நடிகை ரோகிணி கூட வந்திருந்தார். இந்த நிலையில் நடிகர் ரகுவரன் இறப்பதற்கு முன்பாக அதாவது 21/02/2007 ஆண்டு பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அந்த பேட்டியின் போது உங்கள் தனிப்பட்ட வாழ்கை எப்படிப் போயிட்டிருக்கு? என்ற கேள்விக்கு பதிலளித்த ரகுவரன் பேசியதாவது, 

'ஒரு நாள் இரவு காரை எடுத்துட்டு மயிலாப்பூர் சாயிபாபா கோயிலுக்குப் சென்றிருந்தேன். வாசலில் ஒரு வயசான கிழவர் அழுக்காபடுத்திக்கிடந்தார். திடீர் என்று முழித்து ‘எம் பொண்டாட்டியக் காண லையே’னு பதறித்திட்டினார் . கொஞ்ச தூரம் தள்ளித்தான் அவர் பொண்டாட்டி இருட்டுக்குள்ள உட்க்கார்ந்து இருந்தார். பார்த்துட்டு, ‘தெரியாமத் திட்டிட்டேன்டி’ன்னு புலம்பறார். ‘

போய்யா! நீதான் சாப்பிடாம படுத் துட்ட’ன்னு கோவிக்குது அந்தக் கிழவி.அப்புறம் ரெண்டு பேரும் துணி மூட்டையைப் பிரிச்சு, சாப்பிட்டுட்டுப்படுத்து விட்டார்கள். பார்க்கும்போதே மனசு மழை விழுந்த மாதிரி பூத்துப் போச்சு. நினைத்து பார்த்தல் அடுத்த ஜென்மத்திலாவது அந்தக் கிழவனா பிறக்கணும்னு மனசுஏங்கியது.இன்னொரு நாள், சிக்கனலில் காரில் காத்திட்டிருக்கும்போது ஏழு வயசுக் குழந்தை இந்தியில பேசி என் சட்டையப் புடிச்சு இழுத்தது. ஏதோ ஒரு நினைப்பில் சட்டுடென்று குழந்தை கையைத் தட்டிட்டு வந்திவிட்டேன். ஏனெண்று தெரியவில்லை, திரும்பத் திரும்ப அந்தக் குழந்தை முகமே ஞாபகத்துல வந்து கொண்டே இருந்தது. மறுபடி அந்த பையனை போய்த் தேடினேன். அந்தக் குழந்தையைக் காணோம்.

உடனே என் மகன் ரிஷிக்கு போன்செய்து, ‘உன்னைப் பாக்கணும் போல இருக்குடா. நாளைக்கு வர்றியா?’னு கேட்டு, வரச்சொன்னேன். இப்படித்தான் நான் இருக்கேன். எல்லாருக் உள்ளேயும் என்னைத் தேடுறேன். நடந்ததெல்லாம் கனவு மாதிரி இருக்கு. நினைவு மட்டும் நிஜம் போல நிக்குது. தனிமை சிலரை கெட்டவங்களாக மாத்தவிிடும். ஆனால், என்னை அழகா செதுக்கி வெச்சிருக்கு. துக்கத்தைத் தூக்கி உதற பழகிட்டேன்.

என் உலகத்தைச் சந்தோஷமாக மாற்ற வித்தையைக் கற்றுக்கொண்டேன். என் அப்பாவையும் அம்மாவையும் நினைத்து சட்டென்று கண்ணீர் வழிகிறது. எவ்வளவுோ வருடம் என்னை மாதிரி ஒரு நபரை நெஞ்சில் சுமந்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் கூடவே இருக்கேன். அப்புறம் என் பையன் ரிஷி. எப்போதும் எனக்கு அவன் ஞாபகம் தான். என் உலகத்தை அற்புதமாக்குகிறான் ரிஷி. அப்புறம், இருக்கவே இருக்கார் என்னை அன்பால் ஆசீர்வதித்துக்  கொண்டே இருக்கும் சாய்பாபா என்று மிகவும் மனமுருக கனத்த இதயத்துடன் பேசி இருந்தார் ர


Advertisement

Advertisement

Advertisement