• May 19 2024

மறைச்சு மறைச்சு பிக்பாஸ் பார்ப்பேன் இதுவே பெரிய விஷயம்- முதல் முறையாக தனலக்ஷ்மி குறித்து நெகிழ்ந்த ஷிவின்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

இந்த நிலையில், இந்த வாரம் கடைசி நாமினேஷன் நடந்தது. இதனால் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பும் யார் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது. இந்நிலையில், கார்டன் பகுதியில் மைனா மற்றும் ஷிவின் பேசிக்கொண்டிருக்கின்றனர்.


அப்போது ஷிவின்,"ஆபிஸ்ல வேலை பார்க்கும்போது, மறைச்சு மறைச்சு பிக்பாஸ் பார்ப்பேன். ஏன்னா எங்க ஆபிஸ்ல போன் அனுமதி கிடையாது. அப்படி ரசிகையா இருந்துட்டு இந்த ஸ்டேஜ்க்கு வர்றது பெரிய விஷயம். எப்போதுமே தனா கிட்ட சொல்லுவேன். யாருவேனா இங்க இருந்து போறேன்னு சொல்லலாம். ஆனா, நீயோ நானோ அப்படி சொல்ல முடியாது. சாதாரண இடத்துல இருந்து இங்க வந்திருக்கோம். 

செலிபிரிட்டி கூட இங்க வர விருப்பப்படுறாங்க. அவங்களுக்கு கிடைக்காத வாய்ப்பு நமக்கு கிடைச்சிருக்கு-னு சொல்லிருக்கேன். எங்க 2 பேருக்கும் ஒரே கனவு, ஒரே ஏக்கம் இருந்துச்சு. அதுனால அவ வெளியே போனது எனக்கு வருத்தமா இருந்துச்சு. அந்த வாரம் நான்தான் அவளை நாமினேட் பண்ணேன். இருந்தாலும் அவ போனது வருத்தமா இருந்தது" என்கிறார்.


இதனை நெகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருந்த மைனா," இந்த வீட்டுல இருந்து போனவங்கள்ல இங்கேயே அவங்க இருந்திருக்கலாம்-னு எனக்கு தோனியது 2 பேர். மணியும் தனாவும் தான் . ஏன்னா ரெண்டு பேருமே ஃபிசிக்கலா செம்ம tough கொடுத்தாங்க" என்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement