• Jan 18 2025

பிரசாந்திற்கு கிடைத்ததை போல எனக்கொரு அப்பா கிடைக்கல.. ரொம்பவும் எமோஷனலாக பேசிய வனிதா

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் பிரசாந்த் நடிப்பில் அந்தகன்  திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 15ம் திகதி வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோசன்கள் நடைபெற்று வருகின்றன.

அந்தகன் ஆந்தம் பாடலை அனிருத் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலை இன்றைய தினம் இளையதளபதி விஜய் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த படத்தில் நடித்த வனிதா விஜயகுமார் பேச்சுக்களில் உணர்ச்சிவசப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

அதன்படி அவர் கூறுகையில், இந்த நாள் எனக்கு ரொம்பவும் முக்கியமான நாள். அந்தகன் என் வாழ்க்கையில் நான் நடித்த படம் இல்லை. அதற்கும் மேல். இந்த படத்தில் எனக்கு ஒரு கேரக்டர் உள்ளது.   இது எனது குடும்பம். எனது காட்பாதர் யார் என்றால் அது தியாகராஜன் சேர்த்தான். அவர் மீது அதிக அன்பு கொண்டுள்ளேன்.

என்னைப்போல 80களில் பிறந்தவர்களுக்கு நடிகர் பிரசாந்த் தான் முதல் கிரஸ். எனக்கு மிகவும் பிடித்த கதாநாயகன். கடந்த சில ஆண்டுகளில் எனக்கும் பிரசாந்துக்கும் இடையில் உருவான நட்பு மிகவும் மதிப்பு வாய்ந்தது. அவரை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவருடைய அப்பாவிடம் இருந்து கடின உழைப்பும் நேர்மை உள்ள குணங்களையும் கற்றுள்ளார்.


எனக்கு இப்படி ஒரு அப்பா இருந்தா போதும். இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை பெரும். அதற்கு முக்கிய காரணம் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் படத்தில் பணியாற்றியுள்ள டெக்னீசியன்கள் தான்.

முதலில் எனக்கு இது பிரசாந்தின் படம் என தெரியாது. தெரிந்திருந்தால் கொஞ்சம் பணம் அதிகமாகவே கேட்டு வாங்கி இருப்பேன். ஆனால் நான் சூட்டிங்கில் கலந்து கொண்ட எல்லா நாட்களிலும் எனக்கு பணம் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் டப்பிங் போனேன் அப்போது இரட்டிப்பு பணத்தை தியாகராஜன் சார் கொடுத்தார். அவரிடம் பணம் உள்ளது என்பதால் அவர் கொடுக்கவில்லை. அவர்களுக்கு கலைஞர்களை மதிக்க தெரிகின்றது அவர்களின் திறமைகளுக்கு கவுரவம் செய்யத் தெரிகின்றது.

ஒரு முறை எனது போனை தொலைத்துவிட்டேன். அந்த நேரத்தில் அவர் எனக்கு போன் செய்தார். உடனே நான் அவரிடம் கொஞ்சம் பொறுங்கள் நான் எனது போனை தொலைத்து விட்டேன் எனக் கூற, அவர் உடனே எங்கே இருக்கிறாய் என்று கேட்டார். அதன் பிறகு எனக்கு ஐபோனில் 13 மேக்ஸ் ப்ரோவை வாங்கித் தந்தார். இதுபோல யார் செய்வார்கள் யாருக்கு தோன்றும் என பேசியுள்ளார் வனிதா.


Advertisement

Advertisement