• Apr 16 2026

மூணு நாள் கழிச்சு வீட்டுக்கு போக போறேன்! எனக்காக கொசு காத்திட்டு இருக்கும்! 'பாக்கியலட்சுமி' கோபியின் வைரல் வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக பல்வேறு சாதாரண மக்கள் மட்டுமின்றி, பிரபலங்களும் பாதிக்கப்பட்டு தவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகர் கோபியும் வெள்ளத்தில் சிக்கியதன் காரணமாக, மூன்று நாட்களாக அக்கா வீட்டில் தங்கி விட்டு தற்போது தான் தனது வீட்டிற்கு செல்ல போவதாக வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.


அதன்படி, மிக்ஜாம் புயலால் தனது வீட்டில் மின்சாரம் இல்லை, அதன் காரணமாக தன்னுடைய அக்கா வீட்டிற்கு சென்றுள்ளதாக கோபி கூறியுள்ளார்.

எனினும், மீண்டும் தனது வீட்டில் மின்சாரம் வந்துவிட்டதாகவும், மூன்று நாட்களாக அக்கா வீட்டில் இருந்த தான் தற்போது தன்னுடைய வீட்டிற்கு செல்ல உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். 


அத்துடன், என்னதான் அக்கா வீடு, சொந்தக்காரங்க வீடு, நண்பர்கள் வீடு என்றாலும் நம்ம வீடு மாதிரி வருமா? நம்ம வீட்டு கப்பு, நாய் குட்டி, காகம், கொசு எல்லாம் எனக்காக காத்துக் கொண்டு இருக்கும் என நகைச்சுவையாக கூறியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement