• Apr 17 2026

நிறைய அவமானப்பட்டேன்... பழிவாங்கத் தான் சந்தானம் படத்தில் நடித்தேன்.! ராஜகுமாரன் பகீர்.!

shali / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் இயக்குநர் ராஜகுமாரன் தனது தனித்துவமான கதை சொல்லும் திறமையால் பிரபலமானவர். சமீபத்தில், அவர் திரையுலகில் ஏற்பட்ட சவால்கள், விமர்சனங்கள் மற்றும் அந்த சவால்களை வெற்றியாக மாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 


குறிப்பாக, ‘திருமதி தமிழ்’ படத்தினால் ஏற்பட்ட விமர்சனங்கள் மற்றும் அதற்குப் பதிலாக ‘வல்லவனுக்கு  புல்லும் ஆயுதம்’ படத்தில் நடித்ததன் மூலம் கிடைத்த பாராட்டுகள் குறித்து அவர் உருக்கமாக பேசியுள்ளார்.

அதாவது நேர்காணலில், " திருமதி தமிழ் படத்தில சந்தானம் நடிக்க மாட்டேன்னு சொன்னார். ஆனா, நான் அவரோட வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில நடிச்சேன். காரணம், திருமதி தமிழ் படத்தில என்னோட நடிப்பைப் பார்த்து கேலி பண்ணினாங்க எல்லாரும்.... 


அதை பழிவாங்குற மாதிரி அந்தப் படத்தில நடிச்சு இருந்தேன். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில என்ர நடிப்பை எல்லாரும் பாராட்டினாங்க.." என இயக்குநர் ராஜகுமாரன் கூறியுள்ளார்.

இந்த உருக்கமான பேச்சு, திரையுலகில் எதிர்மறை விமர்சனங்களை சாதனையாக மாற்றுவது எப்படி என்பது குறித்து ஒரு முக்கிய பாடமாகும்.

Advertisement

Advertisement