• Jul 10 2026

அஜித் சாரை இயக்க ஆசை! அதுக்காக கொஞ்சம் உழைக்கணும்.. "3BHK" பட இயக்குநர் ஓபன்டாக்!

shali / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் ஸ்ரீ கணேஷ். இவர் இயக்கிய "3BHK" திரைப்படம், ஜூலை 4 வெளியாக இருப்பதுடன் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பும் அதிகமாவே இருக்கிறது. இதனால் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் தற்போது ஊடகங்களில் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றார்.


அந்தவகையில், சமீபத்தில் வழங்கிய நேர்காணல் ஒன்றில், அவர் தனது சினிமா பயணத்தையும், சிறந்த நடிகர் அஜித் குமாரை இயக்கும் ஆசையையும் மிகவும் உருக்கமாக பகிர்ந்துள்ளார். அவரது அந்த வார்த்தைகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.


இயக்குநர் ஸ்ரீ கணேஷ், “நான் அஜித் சாருக்கு ரொம்ப நன்றி கடன்பட்டுள்ளேன். அவரை இயக்க வேண்டுமென்றால் அதற்கான தகுதியை நான் வளர்த்துக் கொள்ளவேண்டும். இன்னும் சில சரியான படங்கள் எடுத்து விட்டு என்றாவது ஒருநாள் அஜித் சாருடன் படம் எடுக்கமுடிந்தால் அது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கும்.” எனக் கூறியுள்ளார். இந்தக் கருத்துகள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement