• Jul 17 2025

ரிலீஸுக்கு ரெடியாகும் அருணின் படங்கள்.. அண்ணாமலை கோவிலில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த உண்மை..

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்துக்கொண்டு வரும் நடிகர் அருண், சமீபத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். காலை தரிசனம் முடித்த பிறகு, கோவில் வெளியே ஊடகவியலாளர்களை சந்தித்த நடிகர் அருண், தான் நடித்த திரைப்படங்கள் குறித்தும் உருக்கமாக பேசியிருந்தார்.


அண்ணாமலையார் கோவிலில் தியானம் செய்து விட்டு வெளியே வந்த நடிகர் அருண், தனது மனநிலையைப் பகிர்ந்தபோது, “ரெட்ட தல மற்றும் இட்லி கடை படங்களின் ஷூட்டிங் முடிஞ்சிட்டு, ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. அந்த தருணத்தில் கோவிலுக்குப் வரணும் போல இருந்திச்சு. அதனால தான் வந்தேன். இங்க வந்ததும் பெரிய மனநிறைவு கிடைச்சிருக்கு.” என்றார்.

அத்துடன், இரண்டும் வெவ்வேறு பாணிகளில் உருவான படங்கள் என்பதால், ரசிகர்களுக்கு ஒரு நல்ல திரை அனுபவம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை எனவும் தெரிவித்திருந்தார். மேலும் தனுஷ் சாருடன் இருந்த அனுபவம் மிகவும் சிறப்பாக இருந்தது, அவர் ஒரு தெளிவான இயக்குநர் எனவும் கூறியிருந்தார். 


Advertisement

Advertisement