தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகை தேவயானி, சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனது குடும்ப வாழ்க்கை மற்றும் பிள்ளைகளின் கல்வி குறித்து சிறப்பாகக் கூறியுள்ளார். பேட்டியில் தேவயானி, தனது மூத்த மகள் இனியா பற்றிய நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

தேவயானி அதன்போது, "என் மூத்த பொண்ணு இனியா நல்லா படிப்பா, நல்ல புத்திசாலி, நான் அவ டாக்டருக்கு படிப்பா என்று நினைச்சேன். ஆனா, அவ ரொம்ப தெளிவா நான் விஸ்காம் தான் படிப்பேன்னு சொன்னா.... சரி அவளுக்கு பிடிச்சத படிக்கட்டும்னு நான் அவளை வற்புறுத்தல... இப்போ போட்டோ கிராஃபி படிச்சிட்டிருக்கா.. அடுத்து ஸ்ரிப்ட் படிக்கப் போறேன்னு சொல்லுறா... பிள்ளைகளுக்கு பிடிச்ச விஷயத்தை செய்ய அனுமதிக்கணும்.." எனக் கூறியுள்ளார்.
இந்த உரையாடல் பிள்ளைகளுக்கு பெற்றோரின் வழிகாட்டல் எப்படி இருக்க வேண்டும் , அதேசமயம் அவர்களின் விருப்பங்களை மதிப்பது எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகிறது. தேவயானி தனது மகளின் ஆர்வங்களை கண்டு, அவளுக்கு விருப்பமான துறையில் முன்னேற அனுமதித்துள்ளார். இந்நிலையில், இனியா தற்போது போட்டோ கிராஃபி கற்கிறார், இது அவரது கலை ஆர்வத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பாக உள்ளது.

இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. நடிகை தேவயானியின் பேட்டி, குழந்தைகளின் விருப்பங்களை மதிக்க வேண்டும் என்ற முக்கியமான கருத்தைக் கூறுவதால் பெற்றோர்களிடையே பெரும் ரசனையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலர் இதனை பகிர்ந்து வருகின்றனர்.
Listen News!