விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9, இந்த ஆண்டு மாபெரும் வரவேற்பைப் பெற்று, தினந்தோறும் பரபரப்பான நிகழ்வுகளுடன் ரசிகர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, இன்று வெளியான எபிசொட்டில் பிக்பாஸ் வீட்டிலிருந்து திவாகர் வெளியேறுகிறார் என்ற செய்தி, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் தனது நகைச்சுவை மற்றும் பேச்சு ஆகியவற்றால் திவாகர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதும், அவரது சம்பளம் குறித்து வெளியான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் அவர்களின் பிரபலத்தன்மை, ரசிகர்களின் ஆதரவு அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததொன்று. இதில், திவாகர் ஒரு நாளுக்கு ரூ. 12,000 சம்பளம் பெற்றதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளது.

அத்துடன் அவர் 40 நாட்களுக்கும் சுமார் 5 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார் என்ற தகவல் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்படுகிறது. இந்த தகவல் வெளியான சில நேரத்திற்குள்ளேயே ரசிகர்கள் இடையே வைரலாகியுள்ளது.
Listen News!