தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்துடன் நடித்து வரும் நடிகர் சிம்பு. அவருடைய கதை மற்றும் நேர்மை நிறைந்த பதில்கள் இவை அனைத்தும் அவரது ரசிகர்களை பெரிதும் ஈர்த்தன. அத்தகைய சிம்பு சமீபத்தில் பங்கேற்ற ஒரு பேட்டியில், மணிரத்தினம் சாரை மையமாகக் கொண்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
பேட்டியின் போது, அவரிடம் ஒரு நடுவர், “சிம்பு சார், நீங்க மணிரத்தினம் சார் படம் என்றால் உடனே டைமுக்கு போய்டுவீங்க. அவர் மேல உங்களுக்குப் பயமா?”என்று கேட்டிருந்தனர். இந்தக் கேள்விக்கு சிம்பு நன்கு சிரித்தபடி பதிலளித்திருந்தார்.
சிம்பு கூறியதாவது, “மணி சார் மேல பயம் கிடையாது. ஆனால் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரோட ஆளுமை, தொழில்முறை நேர்மை இவை அனைத்தும் வியக்கத்தக்கது. அவர் ஒரு நடிகருடைய நேரத்தை வீணாக்கமாட்டார். பேமன்ட் கரெக்டா வரும், அவர் சொன்ன டைமில் படம் ரிலீஸ் ஆகும். அதனால அவரோட கால் வந்தா நிச்சயமாக டைமுக்கு போய்டுவேன்!” எனக் கூறியிருந்தார்.
Listen News!