தமிழ் சினிமாவில் பல காதல் சம்பவங்கள், லவ் பிரேக்-அப் சர்ச்சைகள், மறைந்த நிகழ்வுகள் அனைத்தும் ரசிகர்களை எப்பொழுதும் கவரும் விடயங்களாகவே இருந்து வருகின்றது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு பழைய காதல் சம்பவம் தற்பொழுது பேசப்படத் தொடங்கியுள்ளது.
பிரபல வலைப்பேச்சு தொகுப்பாளர் பிஸ்மி சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது தல அஜித் மற்றும் 90களின் பிரபல நடிகை ஹீரா ராஜகோபால் ஆகியோருக்கிடையிலான காதல் தொடர்பாக சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவரது இந்த சொற்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி, ரசிகர்களிடையே பெரும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.
அந்நிகழ்ச்சியில் தன்னுடைய சினிமா அனுபவங்களையும் கடந்த கால நினைவுகளையும் பகிர்ந்துகொண்ட பிஸ்மி, திடீரென அஜித்தின் பழைய காதலைப் பற்றி பேசத் தொடங்கினார். அதில் அவர் கூறியதாவது, “அஜித் ஹீராவை ரொம்பவே நேசித்தார். அதே மாதிரியே ஹீராவும் அவரை நேசித்தார். இருவரும் சேர்ந்து பல இடங்கள் சுற்றியிருக்காங்க. அப்போது அவர்களுடைய உறவை யாரும் மறுக்கவே முடியாது." என்று கூறியிருந்தார்.
மேலும் “இந்த விவகாரம் பற்றி யாரும் முதல்ல சொல்லவில்லை. ஆனா நான் தான் முதல்ல வெளியுலகத்திற்கு இதை சொன்னேன். அதனால எனக்கு பயமோ, தயக்கமோ கிடையாது. இது நடந்த உண்மை தான். அவர்கள் ரொம்ப நேரம் ரொமான்ஸ் பண்ணியும் இருக்காங்க. பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அவர்கள் இருவரும் பிரேக்-அப் செய்து கொண்டனர்.” எனவும் தெரிவித்துள்ளார்.
அஜித் – ஹீரா காதல் விவகாரம் பல ஆண்டுகளாக மௌனத்தில் மறைந்திருந்த நிலையில் தற்பொழுது வெளியான அவரது இந்த வார்த்தைகள் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா வட்டாரத்திலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!