• May 04 2025

மஞ்சு வாரியரிடம் தவறாக நடந்து கொண்ட நபர்..! கோபத்தில் கண்டனம் தெரிவித்த ரசிகர்கள்..!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகின் பெண் சக்தியின் அடையாளமாக வலம் வரும் மஞ்சு வாரியர், தனது நடிப்பால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகை. சமீபத்தில் ஒரு புதிய கடைத் திறப்பு விழாவில் கலந்து கொண்டிருந்த போது, அவரிடம் ஒருவர் மரியாதை குறைவாக நடந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.


இந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், மஞ்சு வாரியரின் ரசிகர்கள் மட்டும் அல்லாமல், பல பிரபலங்களும், இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒரு பெண்ணிடம் தவறாக நெருக்கமடைய முயற்சி செய்த ரசிகரின் செயலுக்கு எதிராக, பலரும் தங்களது கோபத்தையும் வேதனையையும் பதிவு செய்து வருகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற புதிய கடை திறப்பு விழாவில், மஞ்சு வாரியர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். அதன்போது ரசிகர் தவறாக நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


மஞ்சு வாரியரின் ரசிகர்கள், இந்தச் சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், "இந்த மாதிரியான மோசமான செயல்களை ஆதரிக்க கூடாது" எனவும் கூறியுள்ளனர். இதுவரை மஞ்சு வாரியர் இதுபற்றி எந்தவிதமான பதிலையும் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement