• May 26 2026

இப்படியொரு அழகை இதுவரை பார்த்ததில்ல..!! ஹாப்பி மோடில் த்ரிஷா

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா கிருஷ்ணன் தற்போது பல புதிய படங்களில் பிஸியாக உள்ளார். அவரின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள கருப்பு திரைப்படம் வரும் மே மாதத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் - சங்கீதா பற்றிய விவாகரத்து வழக்கு விவகாரம் தீயாய் பரவிய நிலையில், கடந்த வாரம் விஜய்யுடன் சேர்ந்து ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் கால்பதி சுரேஷ் இல்லத் திருமணத்தில் த்ரிஷா கலந்து கொண்டது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியது.

இதன் பின்னர் த்ரிஷாவின் ஒவ்வொரு சமூக வலைத்தள பதிவுகளும் ரசிகர்களால் அதிகமாக கவனிக்கப்படத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் மும்பைக்கு செல்ல சென்னை விமான நிலையம் வந்த த்ரிஷாவிடம், விஜயுடன் திருமணத்தில் கலந்து கொண்டது குறித்து எழுந்த சர்ச்சை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் எந்த பதிலும் அளிக்காமல் விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டார்.


இந்த நிலையில், நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், 'த்ரிஷா மிகவும் அழகாக இருக்கிறார்' என தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

 

Advertisement

Advertisement