• May 26 2026

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ முன் மீண்டும் ஆஜராகும் விஜய்..

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஜனவரி 12 மற்றும் 19ஆம் தேதிகளில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜயிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து மார்ச் 10ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது. முன்னதாக திட்டமிட்ட பணிகள் இருப்பதால் விஜய் விலக்கு கோரியிருந்தாலும், புதிய சம்மன் அனுப்பப்பட்டதுடன் சென்னையில் ஆஜராக அனுமதி கோரியதும் நிராகரிக்கப்பட்டது.


இதைத்தொடர்ந்து, சென்னையிலிருந்து தனி விமானத்தில் விஜய் டெல்லி புறப்பட்டார். ஆனால் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின் போது அவர் வைத்திருந்த கைப்பையில் கத்தரிக்கோல் இருந்தது கண்டறியப்பட்டது. சிறிய கைப்பைகளில் அதை எடுத்துச் செல்ல அனுமதி இல்லாததால், அவர் தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டார்.

பின்னர் கத்தரிக்கோலை உதவியாளரிடம் ஒப்படைத்த பிறகு விஜய் பயணம் தொடர்ந்தார். இந்த காரணத்தால் அவரது தனி விமானம் சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கரூர் விவகாரம் தொடர்பில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் டெல்லி சென்றடைந்தார். 

 தற்போது டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement