• Apr 12 2026

“கெணத்த காணோம்” படத்திற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் சூர்யா

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வளர்ந்துள்ள ஜோகி பாபு நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் “கிணத்த காணோம்”. இந்தப் படத்தில் அவர் கிராமத்து அம்மன் கோயில் பூசாரியாக நடித்துள்ளார்.  

இந்தப் படத்தின் ஆரம்பத்தில், ஊர் மக்களின் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் அங்கு கிணறு தோண்ட ஆரம்பிக்கின்றனர். ஆனால் அங்கு தண்ணீர் வராமல், அதற்கு பதிலாக டைனோசரின் எலும்புக்கூடு கிடைக்கிறது.

இதனை காமெடி ஜானரில் மட்டுமின்றி, கொஞ்சம் சமூக அக்கறையுடனும் மூடநம்பிக்கைகளையும் சுட்டிக்காட்டியும் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் மறைந்த சுரேஷ் தங்கையா. அவர் “கிடாயின் கருணை மனு” என்ற நல்ல படத்தின் இயக்குநர் ஆவார்.


இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. “கிணறு வெட்ட பூதம் கிளம்பியது” என்ற கதையைப் போல, அங்கு தண்ணீருக்காக கிணறு தோண்டியபோது டைனோசர் எலும்புக்கூடு கிடைக்கிறது.

அதைத் தொடர்ந்து அந்த ஊரை அதிகாரிகள் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். அதன் பின்பு அந்த கிணறு என்ன ஆனது, அதனால் அந்த ஊர் என்ன விளைவுகளை சந்தித்தது என்பதே இந்தப் படத்தின் மீதிக் கதையாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், இந்தப் படத்தை பார்த்த நடிகர் சூர்யா  “சுரேஷ் சங்கையாவின் அர்த்தமுள்ள திரைப்படங்கள் என்றும் நிலைத்து நிற்கும். ‘கிணத்த காணோம்’ படம் பற்றிய நல்ல செய்திகளை பார்த்தேன். சுரேஷ் சங்கையாவின் முந்தைய படங்களுக்கும் நான் ரசிகன். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்,” என்று பாராட்டியுள்ளார்.

Advertisement

Advertisement