• Jan 18 2025

இன்டனேசனல் அளவில் இசை அமைத்துள்ளேன்... விக்ரம் அவர்களுக்கு இதுஒரு சவாலான திரைப்படம்... ஓப்பனாக பேசிய gv. பிரகாஷ்-மாஸாக ரிலீஸ் ஆனா தங்கலான் டீசர்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜனவரி 26, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


நிஜ வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்ட பீரியட் படத்தில் பார்வதி திருவோடு, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டாகிரோன் மற்றும் ஹரிகிருஷ்ணன் அன்புதுரை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


தங்கலானின் 90 நொடி டீஸர், ஒரு பழங்குடித் தலைவரின் சண்டையின் கதையாகத் தோன்றும் காட்சிகளைக் காட்டுகிறது . தங்களுடைய நிலத்தை அபகரிக்க சதி செய்தவர்களுக்கு எதிராக. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது கோலார் தங்க வயல்களில் நடக்கும் உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. 


பா. ரஞ்சித்தின் இப்படைப்புக்கு நடிகரும் இசையமைப்பாளருமான G.V பிரகாஷ் இசையமைத்துள்ளார். தங்களன் திட்டப்படம் தொடர்பாக இவர் கூறுகையில். இத்திரைப்படத்தில் ஒரு புதுவிதமான இன்டனேஷனல் அளவில் இசை அமைத்துள்ளேன்.


எல்லாரும் சேர்ந்து பார்த்து பார்த்து வேலை செய்துள்ளோம். விக்ரம் அவர்களுக்கு இது ஒரு சவாலான படம் எந்த திரைப்படத்தை எடுத்தாலும் அவர் இறங்கி வேலை செய்வார். இந்த திரைப்படத்திலும் அவர் சிறப்பாக செய்துள்ளார் என கூறியுள்ளார். 

இதோ அந்த டீசர்....

      

Advertisement

Advertisement