• Jan 18 2025

ஐஷூ, நிக்சன் மட்டுமில்ல வெளிலையும்இதை தான் பண்றாங்க, தர்ஷன் லாஸ்லியாவை விமர்சித்த சனம் ரெட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் உனக்கு நான் சளைத்தவர் இல்லை என்ற கதையாக விளையாடி வருகின்றனர். இதில் நரி தந்திரத்துடன் செயல்படும் போட்டியாளர்களும் இருக்கின்றனர். அதனாலேயே இந்த சீசன் வழக்கத்திற்கு மாறாக சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது.

இதில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் தான் ஐஷூ. இவர் இதற்கு முன்னதாக டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நடத்தப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று அசத்தி நடனம் ஆடி இருக்கின்றார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட அமீரும், ஐஷூவும் உறவினர்கள் தான். ஐஷூவின் பெற்றோர் தான் அமீரை தத்தெடுத்து வளர்த்து அவருக்கு இருக்கும் நடனத்திறமை வெளியுலகுக்கு காட்டி, இன்று அவர் நடன இயக்குனராக ஜொலிக்க உதவி உள்ளனர். ஐஷூ 5-வது சீசனில் அமீர் போட்டியாளராக இருக்கும்போதே கெஸ்டாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்.


பின்னர் தற்போது 7-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கிய ஐஷூ முதல் இரண்டு வாரம் சூப்பராக விளையாடி வந்தார். அவரது விளையாட்டு முறை அனைவரையும் கவரும் விதமாக இருந்தது. ஆனால் போகப்போக நிக்சன் வீசிய காதல் வலையில் விழுந்த ஐஷூ, தற்போது கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார்.

 முழுநேரமும் நிக்சன் உடனே இருப்பதும் அவருக்கும் உணவு ஊட்டி விடுவது என பிக்பாஸ் வீட்டில் லவ் பர்ட்ஸ் ஆகவே இருவரும் வலம் வருகின்றனர்.இந்த நிலையில் இது குறித்து முன்னாள் போட்டியாளரான சனம் ரெட்டி விமர்சித்துள்ளார். அதாவது தம்பி தம்பி என்று சொல்லிவிட்டு தற்போது எந்த இடத்திற்கு சென்று இருக்கிறார் பாருங்கள் இது அவர் மட்டும் கிடையாது.


 அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால் அண்ணன் தங்கை உறவு என்பது மிகவும் புனிதமானது. அப்படி ஒரு உறவை ஐசு போன்ற நபர்கள் கொச்சைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இதற்கு முன்னாடி சீசனில் கூட உள்ளே அண்ணா அண்ணா என்று சொல்லிவிட்டு வெளியில் வந்து ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள் இப்படிப் பண்ணாதீங்க என்று கேட்டுள்ளார். இதனால் இவர் லாஸ்லியா தர்ஷனை விமர்சித்துள்ளாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement