• Aug 02 2025

துபாய் ரோட்டில் paper போட்டு சம்பாதிச்சிருக்கேன்.! விஜய் சேதுபதியின் கடந்தகால உண்மைகள்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகர் விஜய் சேதுபதி, சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் தன்னுடைய இளமைக்கால அனுபவங்களை உணர்ச்சிவசப்பட்டுப் பகிர்ந்துள்ளார். ரசிகர்களை மட்டும் அல்ல, பல்லாயிரக்கணக்கான வாசகர்களையும் கண்களிலிருந்து கண்ணீர் வரவைக்கும் வகையில் அவரது உரை அமைந்துள்ளது.


விஜய் சேதுபதி துபாயில் இருந்த காலம் பற்றிக் கூறும்போது, "அந்த நாட்களில் ஒரு வேலை இருந்தது. ஆனாலும் சம்பளம் போதாமல், மற்றொரு வேலை தேட முயற்சி செய்தேன். ஆனால் அங்கே பலமான கட்டுப்பாடுகள். ஒரு வேலை செய்து கொண்டு வேறு வேலைகள் செய்வதற்கு அனுமதி இல்லை," என்று தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், “அப்ப தான் ஒரு பத்திரிகையில் வேலை கிடைச்சது. அந்த வேலை newspaper போடுற வேலை தான்.! நான் ஏற்கனவே செய்த வேலையில் 1000 திராம் சம்பாதிச்சிருந்தேன். ஆனாலும் நான் அந்த 500 திராம் வாங்குவதற்காக paper போடுற வேலை செய்தேன்." என்றார். 


 "இந்த வேலை பற்றி இப்ப சொல்லுறதிற்குக் காரணம் என்னவெனில், நான் கஷ்டப்பட்டதை சுட்டிக்காட்ட அல்ல. இந்த உலகத்தில் இன்னும் நிறைய பேர் அந்த 500 திராமுக்காகவே போராடிக்கிட்டு இருக்காங்க. அந்த உண்மையை யாராவது நினைவுபடுத்தணும்!" என்றும் விஜய் சேதுபதி உருக்கமாக தெரிவித்திருந்தார்.  இந்த அனுபவம் ஒரு நடிகராக இல்லாமல், ஒரு மனிதராக அவரது வாழ்க்கையின் ஆழத்தைக் காண்பிக்கின்றது.

இன்றைக்கு விஜய் சேதுபதி,  'சூது கவ்வும்', '96', 'விக்ரம் வேதா', 'மாஸ்டர்' எனப் பல திரைப்படங்களின் மூலம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். அத்தகைய நடிகரின் கடந்தகால வாழ்க்கையை அறிந்த ரசிகர்கள் உண்மையிலேயே பெருமைப்படுகின்றனர்.


Advertisement

Advertisement