• May 30 2025

ராஜேஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்...! யார் யார் தெரியுமா?

Roshika / 1 day ago

Advertisement

Listen News!

சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகருமான ராஜேஷ்  இன்று உடல் நலக்குறைவால் காலமானார். இவர் தனது நடிப்பின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில்நடித்துள்ளார். இவர் பல  திரைப்படங்களில் குணநட்சத்திர வேடங்களிலும் , வில்லனாகவும் நடித்து தனக்கென ரசிகர்களை கொண்டிருந்தார். இவரது மறைவிற்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 


நடிகர் ரஜினி காந்த் தனது சமூக வலைத்தளப்பாக்கத்தில் "என்னுடைய நெருங்கிய நண்பரும்  நடிகருமான ராஜேஷ் அவர்களின் மறைவு தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், மிகுந்த மனவேதனையை தருவதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் மிகவும் அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்திருந்தார். 


இதனை தொடர்ந்து கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் "ராஜேஷ் என்ற மனிதரின் பெளதிக உடலுக்கு மூன்று மரணங்கள் நேர்ந்திருக்கின்றன" எனத் தொடங்கும் கவிதை வரிகள் மூலம் தனது ஆழ்ந்த  இரங்கலை  தெரிவித்து தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .






Advertisement

Advertisement