தற்காலத்தில் இந்திய அளவில் பெரும் பிரச்சனையாக இருப்பது இந்தி திணிப்பு.அரசியல் தலைவர்கள் முதல் திரையுலகமும் இதற்கு எதிரான கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.இவ் இந்தி திணிப்பிற்கு எதிராக திரையுலகத்தின் ஒட்டு மொத்த வெளிப்பாடாகவே அமைந்திருக்கிறது "ரகு தாத்தா" திரைப்படம்.
ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவன அதிபர் விஜய் கிரகந்தூர் தயாரித்து சுமன் குமார் இயக்கத்தில் வெளிவர இருக்கும் "ரகு தாத்தா" திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.மேலும் முக்கிய கதாபத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பல நடிகர்கள் இணைத்துள்ளனர்.
வெளியான "ரகு தாத்தா" படத்தின் டீசர் ஒற்றை நிமிடத்தில் படத்தின் மொத்த சாரத்தையும் வெளிப்படுத்தி படத்திற்கான எதிர்பார்ப்பை மக்களிடையே அதிகரித்துள்ளது.வருகிற ஆகஸ்ட் 15 ஆம் திகதி திரையரங்களுக்களில் "ரகு தாத்தா" படம் வெளியாகவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அண்மையில் முன்னனி ஊடக நிறுவனத்தில் இடம்பெற்ற நேர்காணலில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் ,தொகுப்பாளர் "ரகு தாத்தா" படம் பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது "படத்தில் இந்தி ‘திணிப்பை’ப் பத்திதான் சொல்றோம். எந்த விஷயத்துல திணிப்பு இருந்தாலும் அது தப்புதான். நான் மொழிக்கு எதிரா பேசலை, திணிப்புக்கு எதிராதான் பேசுறேன் " என பதிலளித்திருந்தார்.
Listen News!