• Jul 27 2025

“நான் ஸ்ரீகாந்தின் சித்தப்பாவா?” – விளக்கம் அளித்த அந்தணன்..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில் இதுதொடர்பாக நடிகர் கிருஷ்ணாவும் போலீசார் விசாரணையில் சிக்கியதற்கு பின்பு இணையத்தில் பல வதந்திகள் பரவி வருகின்றன.


இதில் முக்கியமானதாக “வலைப்பேச்சு அந்தணன் தான் ஸ்ரீகாந்த்தின் சித்தப்பா” என்ற தகவல் பரவியது. இதற்கு பதிலளித்த அந்தணன் “நான் தான் ஸ்ரீகாந்த்தின் சித்தப்பா என்னை புடிச்சி உள்ள போட்டு விசாரீங்கன்னுலாம் நிறைய பேர் சொல்றாங்க. நான் ஸ்ரீகாந்துக்கு சித்தப்பா இல்ல அவர் வேறு சமூகம் நான் வேறு சமூகம். நானும் அவரும் பேசி 20 வருஷம் ஆச்சி” என்று தெளிவாக கூறியுள்ளார்.


இந்த நிலையில் தற்போது இது தொடர்பான அவரது விளக்கம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் ஒரு சில நெட்டிசன்கள் இவர் பொய் சொல்லுவதாக கூறி வருகின்றனர். மேலும் காவல்துறை தொடர்ந்து விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றது.

Advertisement

Advertisement