• Jan 19 2025

இலங்கை விமானநிலையத்தில் சாப்பிடுவதற்காகச் சென்ற நாஞ்சில் விஜயனுக்கு காத்திருந்த அதிர்ச்சி- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பான அது எது எது, கலக்க போவது யாரு உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் தனது பேச்சு, காமெடி, உடல்மொழி போன்றவற்றால் பலரை சிரிக்க வைத்தவர் நாஞ்சில் விஜயன். இவர் பெரும்பாலும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பெண் வேடம் ஏற்று நடிப்பார். மிகவும் நேர்த்தியாக இருக்கும்.

தனியாக யூடியூப் சேனலையும் நடத்தி வரும் இவர் சர்ச்சைக்குரிய விடயங்களை அடிக்கடிப் பேசி சர்ச்சைகளிலும் சிக்கி வருவதுண்டு. குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டில் டிக் டாக் பிரபலம் சூர்யா தேவி மற்றும் வெள்ளித்திரை நடிகை வனிதா இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த பிரச்சனையில் வனிதாவுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு இருந்தார் .  


இதனால் சூர்யா தேவி மற்றும் நாஞ்சில் விஜயனுக்கு பிரச்சனை ஏற்பட்டது.சூர்யா தேவி, நாஞ்சில் விஜயன் மீது போலீஸில் புகார் அளிக்க அவர் மீது ஐந்து பிரிவுகள் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிற்காக நாஞ்சில் விஜயன் ஆஜராகாத காரணத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.

தற்பொழுது அதிலிருந்து விடுதலையான இவருக்கு அண்மையில் திருமணமும் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு பல்வேறு சேனல்களில் தன் மனைவியுடன் பேட்டியளித்தும் வந்தார்.

இந்த நிலையில் இவர் இலங்கைக்குச் சென்றுள்ளார். அங்கே விமானநிலையத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் சாப்பிடுவதற்காக போயிருக்கின்றார்.வெறும் சோறும் ஒரு குழம்பு கறிக்கும் என்னிடமிருந்து தொள்ளாயிரம் ரூபா வாங்கி விட்டனர் என்று புலம்பியுள்ளார். இது குறித்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement