தமிழ் மற்றும் இந்திய திரையுலக ரசிகர்கள் மனதில் இன்றும் நினைவுகூரப்படும் நடிகைகளில் ஒருவர் அசின். முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்த அசின், உச்சத்தில் இருந்த காலத்திலேயே திரையுலக வாழ்க்கைக்கு விடை கொடுத்து, குடும்ப வாழ்க்கையை தேர்வு செய்திருந்தார். இருப்பினும், அவரது ரசிகர்கள் இன்று வரை அவரை மறக்காமல் சமூக வலைத்தளங்களில் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகை அசின் மற்றும் அவரது கணவர் ராகுல் ஷர்மா ஆகியோர் திருமணம் செய்து இன்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த சிறப்பு நாளை முன்னிட்டு, ராகுல் ஷர்மா தனது சமூக வலைத்தள பக்கத்தில் அசினின் Throwback புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, தனது வாழ்த்துகளை வெளிப்படுத்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அசின் – ராகுல் ஷர்மா தம்பதியினர் ஜனவரி 19, 2016 அன்று திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் சிறப்பாக, குடும்பத்தினரின் முன்னிலையில் நடைபெற்றிருந்தது. சினிமா உலகின் பிரபலமான நடிகையாக இருந்தாலும், திருமணத்திற்கு பிறகு அசின் முழுமையாக குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.
திருமணத்திற்கு முன்பு, அசின் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ‘கஜினி’, ‘போக்கிரி’, ‘தசாவதாரம்’ போன்ற பல ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தார். குறிப்பாக, ‘கஜினி’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!