• Feb 12 2026

இவனெல்லாம் ஹீரோவானு ஹிந்தியில் கிண்டல் பண்ணாங்க... குஷ்பு உடைத்த உண்மை

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகிலும் தமிழக அரசியலிலும் தனித்துவமான முத்திரை பதித்தவர் கேப்டன் விஜயகாந்த். நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பல முகங்களைக் கொண்ட அவர், இன்றும் பொதுமக்கள் மனதில் நீங்கா அடையாளமாக பதிந்துள்ளார்.

1979ஆம் ஆண்டு இனிக்கும் இளமை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் விஜயகாந்த்.. அதன் பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக உயர்ந்த அவர், கேப்டன் பிரபாகரன், ஊமை விழிகள், சத்ரியன், புலன் விசாரணை, வால்டர் வெற்றிவேல் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தார்.  

திரையுலகில் மட்டுமல்லாமல், அரசியலிலும் தனி பாதையை உருவாக்கினார்.  விஜயகாந்தின் வெளிப்படையான பேச்சு, மக்கள் நலனில் அக்கறை, அதிகாரிகளையும் ஆட்சியையும் நேரடியாக கேள்வி கேட்கும் தைரியம் ஆகிய காரணங்களால் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றார்.  

எனினும், 2023 டிசம்பர் 28ஆம் தேதி விஜயகாந்த் மறைந்தார். அவரது மறைவு, தமிழ் சினிமா மற்றும் அரசியல் உலகில் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியது.  


இந்த நிலையில்,  நடிகை குஷ்பு மறைந்த நடிகர் விஜயகாந்த் பற்றி பேட்டி ஒன்றில் தெரிவித்த கருத்து தற்போது வைரல் ஆகியுள்ளது.

அதன்படி அவர் கூறுகையில், FEFSI  பிரச்சனை நடந்த போது,  பாம்பேல இருந்து வந்த டெக்கன்ஷன் தலைவர் கோடம்பாக்கம் ஹோட்டலில் இருந்தாரு. அப்போ நானும் விஜயகாந்த் சாரும் போனோம்.

நாம ரூம் உள்ள போன போது அங்க ஒரு சேர் கூட போட. அவர் பெட்ல கால் மேல கால போட்டு இருந்துட்டு, ஹம்ம்ம் என்ன சொல்லுன்னு தெனாவட்டா பேசினாரு..

மேலும் அங்க இருந்தவங்க எல்லாரும் ஹிந்தியில் கிண்டல் பண்ணாங்க.. இவன் எல்லாம் ஒரு ஹீரோவானு கேட்டாங்க.. எனக்கு கோபம் வந்து சண்டைக்கு போய்டேன்.

ஆனா விஜயகாந்த் சார் தான் நமக்கு வேலை நடக்கணும், எனக்கு பின்னாடி 2000 குடும்பம் இருக்குது. அதுக்காக தான் நான் அமைதியா இருக்கேன் என்று சொன்னாரு.. என்று குஷ்பு நினைவுகூர்ந்தார். 

Advertisement

Advertisement