• Jan 19 2025

நயன்தாரா வாழ்வில் தவறவிட்ட 20 பக்கங்கள்? இன்ஸ்டாவில் பகிர்ந்த உருக்கமான பதிவு

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

திருமண வீடுகளில் பூ தூவும் பெண்ணாக இருந்து, தனது திறமையால்  சினிமாவுக்கு அறிமுகமாகி இன்று தமிழ்நாடு மட்டும் இன்றி இந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. இவர் "லேடி சூப்பர் ஸ்டார்" என்று தனக்கென ஒரு அடையாளத்தையே உருவாக்கி உள்ளார்.

இவ்வாறு பல படங்களை நடித்தஇவருக்கு 'நானும் ரௌடிதான்' என்ற திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன், குறித்த படத்துக்காக நயன்தாராவுக்கு கதை சொல்லும் போது இருவருக்கும் காதல் மலர்ந்து. சில வருடங்கள் லிவிங்கில் இருந்து வந்தனர். பின்பு மிகவும் கோலாகலமாக பல சினிமா பிரபலங்களுடன் இவர்களது திருமணமும் நடந்து முடிந்திருந்தது.


இதனைதொடர்ந்தே இருவரும் வாடகை தாய்மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்திருந்தனர். இது சிலகாலங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டாலும்  இருவரும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதுடன் குழந்தைகளின் புகைப்படைகளையும் அடிக்கடி பகிர்ந்து வந்தனர். 


இந்த நிலையில், நடிகை நயன்தாரா அவரது அடுத்தப் படத்திற்கான படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் சென்று 20 நாட்கள் கழித்து மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

இதன்போது, தனது பிள்ளைகளை விட்டுப் பிரிந்த வேதனையும், அவர்களை மீண்டும் பார்த்த சந்தோஷத்தையும் புகைப்படங்களுடன் மிகவும் உருக்கமாக வெளியிட்டு உள்ளார்.

குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களை நெகிழ்ச்சியாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement