சமீபத்தில் நடிகர் விக்ரமின் வித்தியாசமான கதாப்பாத்திரத்துடன் திரையரங்குகளில் வெளியாக இருந்ததே ‘வீர தீர சூரன்’. இதற்காக ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப்பிரபலங்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். எனினும், அந்த எதிர்பார்ப்புக்குத் தற்போது பெரிய தடை ஒன்று ஏற்பட்டுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த சமீபத்திய உத்தரவால் படம் ரிலீஸாவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது என்பது ரசிகர்கள் மற்றும் தயாரிப்பு வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தை தயாரித்தது ஹெச்.ஆர் பிக்சர்ஸ் என்ற நிறுவனம். இப்படத்தின் ஓடிடி உரிமை மற்றும் விநியோக ஒப்பந்தங்களைச் சுற்றி பெரிய சட்டச்சிக்கல் ஒன்று தற்பொழுது உருவாகியுள்ளது.
இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் ரூ. 7 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்றதுடன் அதன் சார்பில் அனைத்து சட்டபூர்வமான ஆவணங்களையும் 48 மணி நேரத்துக்குள் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது. முக்கியமாக, இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தை திரையரங்குகளில் அல்லது ஓடிடியில் வெளியிடக் கூடாது என இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் இதுவரை அதிகார பூர்வமாக எந்தவொரு பதிலும் வெளியிடவில்லை. எனினும் படத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள், “இந்த வழக்கை விரைவில் சட்டரீதியாக எதிர்த்து, படம் வெளியாவதற்கான வழியை உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றது” எனத் தெரிவித்துள்ளனர்.
Listen News!