சீரியல் உலகில் தங்களது அழகு, நடிப்பு என்பன மூலம் பரவலாக பேசப்படும் நடிகை ஷபானா மற்றும் ஜனனி ஆகிய இருவரும் ஒன்றாக போஸ் கொடுத்த ஒரு கியூட்டான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்பொழுது ஷேர் செய்யப்படுகிறது.
இருவரும் தேவதைகள் போலவும் அழகின் உருவமாகவும் காட்சியளிக்கின்றனர். இதனைப் பார்த்த ரசிகர்கள், "அழகுக்கு வரையறை இருக்கேன்னு சொன்னாங்க... ஆனா இவங்களுக்கு அது பொருந்தாது..." என பல்வேறு ரசனையான கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர்.
ஷபானா, ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய செம்பருத்தி சீரியல் மூலம் அறிமுகமாகி தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர். அவரின் இயற்கையான நடிப்பும், ஸ்கிரீனில் அவர் கொண்டுவரும் பாசிட்டிவ் எனர்ஜியும், ரசிகர்களிடம் விரைவில் இடம் பிடிக்க காரணமானது. ஜனனியும் அதே போல சீரியல்கள் மூலம் பிரபலமாகி மக்கள் மனதைக் கவர்ந்திருந்தார்.
சமீபகாலமாக, ஷபானா தனது இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள ஷபானா, தனது புதிய வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்பொழுது நடிகையான ஜனனி, ஷபானாவுடன் இணைந்து உள்ள கியூட்டான வீடியோவில் மிகவும் அழகாக காணப்படுகின்றார்கள். வைரலான வீடியோ இதோ.!!
Listen News!