• May 21 2024

Biggboss-7 இல் அதிக சம்பளம் வாங்குபவர் இவர்தானாம்... அதுவும் எவ்வளவு தெரியுமா..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

மக்கள் மனம் கவர்ந்த ஷோவாக இருப்பது பிக்பாஸ். அதாவது 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் எந்தவித வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், மக்களின் ஆதரவோடு பிரபலங்கள் தங்களுடைய முன் பின் தெரியாத பிரபலங்களுடன் இந்த வீட்டில் எந்த விதமான சூழ்நிலையிலும் தாக்குப் பிடித்து தங்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய டாஸ்க் -ஆக உள்ளது.


அந்தவகையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-ஆவது சீசன் நேற்று முன் தினம் 18போட்டியாளர்களுடன் அட்டகாசமாக ஆரம்பமாகி உள்ளது. இந்த சீசனில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்ற கமல்ஹாசனுக்கு 130கோடி சம்பளமாக பேசப்பட்டிருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது.


இதனையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்பதனை அறியப் பலரும் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் தற்போது வெளியாகிய தகவலின் படி பவா செல்லதுரைக்கே அதிக சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


அதாவது பிரபல எழுத்தாளரான பவா செல்லத்துரைக்கு ஒரு வாரத்திற்கு மட்டுமே ரூபாய் 1 முதல் 2 லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இவருக்கு அடுத்த படியாக நடிகை விசித்திரா அதிக சம்பளம் பெறும் போட்டியாளராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement