• May 17 2024

லகுட பாண்டிகளா? ஒரே ஒரு ரிக்குவஸ்ட் தான் ! பவாவை வயதானவர் என நாமினேஷன் செய்து தூக்கி விடாதீர்கள்! கடுப்பாகிய பவா ரசிகர்கள் !

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்து  ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் மொத்தமாக 18 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்களில் யார்  டைட்டில் வின்னர் ஆகப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


பிக்பாஸ் வீடு, சிமோல் வீடு என இரு வீடாக ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இந் நிகழ்ச்சியில்  கேப்டனை கவராத ஆறு பேரை ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி இருக்கின்றார்.பிக்பாஸ். அதில்  பவா செல்லதுரை, நிக்ஸன், அக்‌ஷயா, ரவீனா, ஆயிஷா, வினுஷா ஆகிய ஆறு பேர் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு சென்றிருக்கின்றனர். 


இந்நிலையில் நேற்றைய தினம்  முதல் வாரத்திற்கான நாமினேஷன் நடந்தது. அதில் அதிகபட்சமாக நான்கு பேர் ஜோவிகாவை நாமினேட் செய்து இருந்தனர். மேலும் யுகேந்திரன் மற்றும் பிரதீப்புக்கு 3 ஓட்டுக்கள்  விழுந்ததால் அவர்களும் நாமினேட்  ஆகி உள்ளனர்.

மொத்தமாக நாமினேஷன் லிஸ்ட்டில் 7 பேர் இடம் பிடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் பவா செல்லத்துரையும் ஒருவர் நாமினேஷனில் அவரது பெயர் இடம் பெற்றதும்  பவாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக  கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 


பவா கோப்பை வெல்வாரா தெரியாது! ஆனால் அவர் உள்ளே இருப்பது அவசியம் லகுட பாண்டிகளா? ஒரே ஒரு ரிக்குவஸ்ட் தான்! பவாவை வயதானவர் என  நாமினேஷன் செய்து தூக்கி விடாதீர்கள், நீங்கள் நான் அவரிடம் கற்றுக்கொள்ள நிறையாஇருக்கின்றது. ஆண்டவர பிடிச்சவங்களுக்கு பவாவையும் பிடிக்கும், 50நாட்கள் ஏனும் அவர் இருக்க வேண்டும்  என அவருக்கு ஆதரவாக பல  கமெண்ட்கள் சமூக வலைதளத்தில் குவிந்த வண்ணம் இருக்கின்றது.

Advertisement

Advertisement