• Mar 31 2025

முதல் நாளே மெகா ஹிட் கொடுத்த எல்2 எம்புரான்....! வேறலெவல் வரவேற்பா இருக்கே..!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரும், இந்திய திரைப்பட உலகின் நம்பிக்கை நடிகருமான மோகன்லால் நடித்த எல்2: எம்புரான் திரைப்படம் நேற்றைய தினம் உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. பிருத்விராஜ் இயக்கத்தில் உருவாகியிருப்பதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.


அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில் எம்புரான் படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் படம் வெளியான முதல் நாளே திரையரங்குகளில் அதிகளவான ரசிகர்கள் திரண்டு கொண்டனர்.

‘எல்2: எம்புரான்’ படம், 2019ம் ஆண்டு வெளியான லூசிபர் படத்தின் தொடர்ச்சியாகும். மோகன்லால் நடித்த அந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, அந்தக் கதைத் தொடரை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ள ‘எம்புரான்’ படமும், அதே பரபரப்பைக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் படம் வெளியான முதல் நாளே 21.55 கோடி வசூல் செய்து இந்தியளவில் சாதனை படைத்துள்ளது.



Advertisement

Advertisement