• Mar 04 2026

டில்லி மகளா இது... அட என்ன இப்படி மாறிட்டாங்க... இணையத்தில் கலக்கும் வீடியோ இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான கைதி படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். அந்த படத்தில் டில்லி கதாபாத்திரம் ஏற்று நடித்த கார்த்திக் மகளை நடித்த மோனிகா அவர்களின் வீடியோ இணையத்தில் வைரல் அடைந்து வருகிறது.


ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான கைதி ரசிகர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்தது. லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 படத்தை எடுத்த முடித்த பிறகு கைதி இரண்டாம் பாகத்தை எடுப்பார் என்று அவரே பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.


கைதி படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்த பேபி மோனிகா இப்போது ஹீரோயின் போல மாறிவிட்டார். சோசியல் மீடியாவில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர், தற்போது வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், டில்லி மகளா இது? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ...


  

Advertisement

Advertisement