• Oct 30 2026

நயன் என கத்திய சிறுவன்! உடனே நயன்தாரா செய்த செயல்! வைரல் வீடியோ இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா இது வரை ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இறுதியாக ஜவான் திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானுடன் நடித்திருப்பார். இது 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. 


தற்போது, யாஷ் நடிக்கும் 'டாக்சிக்' படத்திலும், மலையாளத்தில் நிவின் பாலியுடன் 'டியர் ஸ்டுடண்ட்ஸ்' படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில், டியர் ஸ்டூடண்ட்ஸ் படப்பிடிப்பின்போது நடிகை நயன்தாரா. சிறிய வயது ரசிகர் ஒருவருடன் சைகையில் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.


நயன்தாரா இரவு நேர படப்பிடிப்பில் ஈடுபட்டார். அப்போது சிறுவன் ஒருவன் நயன்தாராவின் பெயரை சத்தமாக கத்துகிறான். இதனை பார்த்த நயன்தாரா சைகையில், சாப்பிட்டாயா. போய் தூங்கு என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ... 


Advertisement

Advertisement