• Apr 03 2025

பாடல் பாடுவதற்காக படம் எடுத்த நடிகை...- வெளியான உண்மை இதோ!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட  நடிகை சிந்தியா தமிழ் சினிமா வாழ்க்கை பற்றி கூறியுள்ளார். அதில் அவர், சினிமா எப்போதும் புதுமைகளைத் தேடும் கலை என்று குறிப்பிட்டார். அந்த வகையில்,  சிந்தியா ஒரு சாதாரண கதையிலிருந்து ஒரு முழுமையான திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். மேலும் "ஒரு பாடல் பாடணும்னு தான் படம் எடுத்தேன்" என்று கூறியிருந்தார். இது ஒரு புதிய இயக்குநரின் தனித்துவமான பார்வையை வெளிப்படுத்துகிறது.

மேலும் அவர் கூறுகையில், இசை தான் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு அம்சம் என்றார். தமிழ் சினிமாவில் ஒரு பாடல் மற்றும்  கதையை மையமாக வைத்து தான் படம் உருவாகிறது எனவும் கூறினார். அத்துடன் ஒரு படம் ஒன்றில் தான் பாடல் பாட வேண்டும் என்பதற்காகவே படத்தை தயாரிக்க சொன்னேன் என்றார். 


இது தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சி என்பதால், இசையை மட்டுமே மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது எனத் தெரிவித்தார். இந்த முயற்சி மூலமே எனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றினேன் என்றார்.

அத்துடன் திரையுலகில் பாடகர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பு கிடைக்கின்றது இதனால் தான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன் எனவும் கூறியுள்ளார். இது ஒட்டுமொத்த திரை ரசிகர்களிடையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் சிந்தியாவின் இந்த முயற்சியை பலரும் பாராட்டுகின்றனர்.

Advertisement

Advertisement