இன்று மாலை நடிகர் விக்ரமின் வித்தியாசமான கதாப்பாத்திரத்துடன் திரையரங்குகளில் வெளியாகிய திரைப்படம் 'வீர தீர சூரன்'. இப்படம் விக்ரமின் புதிய மற்றும் சுவாரஸ்யமான தோற்றத்துடன் ரசிகர்களையும் திரைப்பிரபலங்களையும் பெரும் எதிர்பார்ப்பில் வைத்தது. இருந்தாலும் ஒரு சில பிரச்சினைகளின் காரணமாக இன்று காலை வெளியாக இருந்த இப் படம் ஒரு சில மணித்தியாலங்களின் முன்னர் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் முதல் ஷோவினை ரசிகர்களுடன் சேர்ந்து பார்வையிடுவதற்காக விக்ரம் உட்பட பல சினிமா பிரபலங்களும் வருகை தந்திருந்தனர். மேலும் படம் முடிந்து வெளியேறியதும் மக்கள் நல்ல விமர்சனங்களை அளித்து வருவதை காண முடிகின்றது.
மேலும் ஒரு சில மக்கள் விமர்சனங்கள் இதோ " சத்தியமா சொல்லுறேன் இந்த வருஷத்தோட சிறந்த படமாக இந்த படம் இருக்கும் ; படம் பார்க்கும் போது ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதிக்கிற மாதிரி இருந்திச்சு ; செம worst படம் ; கதையை இன்னும் மேல மேல தூக்கிட்டு போகுது ; sj சூர்யா வெறித்தனமா நடிச்சிருக்கார்; காலைல ஏன் படத்தை ரிலீஸ் பண்ணலன்னு கடுப்பாகுது ; சீயான் வேற லெவல் ஆக்டிங் "
Listen News!