• Aug 29 2025

வேற லெவல் மாஸ்.!! விஷாலின் "மகுடம்" பட லுக்கால் ஷாக்கான ரசிகர்கள்.! வெளியான போஸ்டர் இதோ.!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ள நடிகர் விஷால், ஆகஸ்ட் 29, 2025 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவிக்கும் வகையில் ‘மகுடம்’ படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


‘மகுடம்’ திரைப்படம், ரவி அரசு என்பவர் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இப்படம் ஒரு அரசியல் சூழ்நிலை மற்றும் பரபரப்பான திருப்பங்களை கொண்ட த்ரில்லர் என சினிமா வட்டார தகவல்கள் கூறுகின்றன.


இப்படத்தில் விஷால் முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளதுடன், அவருடன் அஞ்சலி, துஷாரா விஜயன் போன்ற நடிகைகளும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். இது விஷால் ரசிகர்களுக்கு "தரமான comeback" ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement

Advertisement