• Oct 26 2025

மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றிவிட்டார்... அதிரடியாக புகாரளித்த ஜாய் கிரிசில்டா..!!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராகவும், சமையல் கலைஞராகவும் இடம்பிடித்திருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது சர்ச்சையின் மையமாக உள்ளார். இவர் ஏற்கனவே ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து இருந்த நிலையில், சில தினங்களுக்கு முன் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவரை மறுமணம் செய்திருந்தார். 


அந்த போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன. இந்நிலையில் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கி பின்னர் எதுவும் நடக்காதது போல் விலகிவிட்டதாக புகார் அளிக்க உள்ளதாக செய்திகள் தற்பொழுது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளியான தகவல்களின் அடிப்படையில், ஜாய் கிரிசில்டா என்ற இளம் பெண்,  மாதம்பட்டி ரங்கராஜ் மீது வழக்கு முறையீடு செய்ய உள்ளதாக தெரியவந்துள்ளது. 


இந்நிலையில், அவர் காவல்துறையில் அதிகாரபூர்வமாக புகார் அளிக்க தயாராக இருப்பதாகவும், நியாயம் கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement