இந்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜயின் ஜனநாயகன் படமும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் இது அண்ணன் தம்பி பொங்கல் என்றெல்லாம் கொண்டாடப்பட்டது.
ஆனால் சென்சார் போர்டு போட்ட முட்டுக்கட்டையால் பொங்கல் ரேஸிலிருந்து ஜனநாயகன் திரைப்படம் வெளியாகவில்லை. எனினும் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் தடைகளை தாண்டி ரிலீஸ் ஆனது.
இந்த நிலையில், பொங்கல் ரேஸிலிருந்து ஜனநாயகன் திரைப்படம் விலகியதால் அடுத்தடுத்து புதுப் படங்கள் களம் இறங்க உள்ளன.
அதன்படி கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள வா வாத்தியார் திரைப்படம் பொங்கல் ரேஸில் ரிலீசாக உள்ளது. இந்தப் படம் ஜனவரி 14-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' என்ற படமும் ஜனவரி 15 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. மேலும் திரௌபதி 2 படமும் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது.
எனவே பராசக்தி படத்துடன் மோத உள்ள இந்த படங்கள் வசூலில் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே நேரத்தில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் போது தான் உண்மையான பொங்கல் என விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது .
Listen News!