தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன், நாளுக்கு நாள் பரபரப்பாக நகர்ந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் புதிய டுவிஸ்ட்கள், டாஸ்க்குகள், வெளியேற்றங்கள் என நிகழ்ச்சி ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற பணப்பெட்டி (Money Box) டாஸ்க், பார்வையாளர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த டாஸ்க்கில், போட்டியாளர் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். ஆரம்பம் முதலே டைட்டில் வின்னர் ஆக அதிக வாய்ப்புள்ள போட்டியாளராக பார்க்கப்பட்ட கானா வினோத்தின் வெளியேற்றம், அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாகவும், சோகமாகவும் அமைந்தது.

கானா வினோத், பிக் பாஸ் வீட்டில் தனது இயல்பான குணம், நேரடி பேச்சு மற்றும் உணர்ச்சிபூர்வமான அணுகுமுறை மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருந்தார். அதனால் தான், “இந்த சீசனின் டைட்டில் வின்னர் இவர் தான்.” என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர் பணப்பெட்டியை எடுத்தது சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களை எழுப்பியது.
ஒரு தரப்பினர் அவரது முடிவை புரிந்து கொண்டு ஆதரவு தெரிவித்தாலும், மற்றொரு தரப்பினர் “டைட்டில் வெல்லும் வாய்ப்பை விட்டுவிட்டார்.” என விமர்சித்தனர்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின், கானா வினோத் தனது முடிவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அவரது பேச்சு, பலரையும் உணர்ச்சிபூர்வமாக பாதித்துள்ளது.
அவர் அதன்போது," நிறைய பேர் நான் பண பெட்டிய எடுத்தது தப்புன்னு சொல்லுறாங்க. ஆனா, நாம செம பசில இருக்கும் போது பிரியாணிக்காக காத்திருப்போமா? அந்த நேரத்தில கஞ்சியோ, கூழோ குடிச்சு வயிறை நிரப்புவோம்ல.. அது மாதிரி தான், நான் ரொம்ப கஷ்டத்துல, ஒரு ரூபா இல்லாமல் தான் உள்ள வந்தேன். அந்த 18 லட்சத்தைப் பார்க்கும் போது என் பசங்களோட வாழ்க்கையா தான் தெரிஞ்சது... " எனத் தெரிவித்திருந்தார்.
கானா வினோத்தின் இந்த விளக்கத்திற்கு பிறகு, அவரது முடிவை விமர்சித்த பலரும் தற்போது ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Listen News!