தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித் குமார், திரையுலக சாதனைகளுக்கு அப்பாற்பட்டு தனது தனிப்பட்ட ஆர்வங்களாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். குறிப்பாக, கார் ரேஸிங் மீது அவருக்கு இருக்கும் ஆழ்ந்த காதல் பல ஆண்டுகளாக அனைவருக்கும் தெரிந்த விஷயமாக உள்ளது. நடிப்பு வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தாலும், தனது கனவான மோட்டார் ரேஸிங்கை அவர் ஒருபோதும் கைவிடவில்லை என்பதே அவரது தனிச்சிறப்பு.
அண்மைக் காலமாக நடிகர் அஜித் குமார், பல்வேறு சர்வதேச கார் ரேஸிங் போட்டிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். குறிப்பாக, ஸ்பெயின் மற்றும் அபுதாபி போன்ற நாடுகளில் நடைபெற்ற முக்கிய ரேஸிங் நிகழ்வுகளில் அவர் பங்கேற்றது, இந்திய ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.

சினிமா நடிகர் என்ற அடையாளத்தைத் தாண்டி, ஒரு முழுமையான ரேஸர் போலவே அஜித் இந்த போட்டிகளில் கலந்து கொள்வது, உலகளாவிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்களிடமும் கவனம் பெற்றுள்ளது. எந்த வித ஆடம்பரமும் இல்லாமல், அமைதியாக தனது ஆர்வத்தை பின்பற்றி வருவது தான் அவரின் வழக்கம்.
இந்த நிலையில், தற்போது அபுதாபி ரேஸிங் களத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களில், பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், நடிகர் அஜித் குமாரை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
ரேஸிங் சூழலில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள், ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித் தனது ரேஸிங் உடையில் இருக்கும் தோற்றமும், அனிருத் அவருடன் இயல்பாக உரையாடும் காட்சிகளும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளன.
Listen News!