ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 2023ஆம் ஆண்டு வெளியான Jailer திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. Sun Pictures தயாரித்த இந்த படம் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது Jailer 2 உருவாகி வருகிறது.
இந்த இரண்டாம் பாகத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ‘ஜெயிலர் 2’ வரும் ஜூன் மாதத்தில் திரைக்கு வரலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையில், இப்படத்தின் ஓ.டி.டி உரிமம் குறித்து வெளியாகியுள்ள தகவல் கவனம் ஈர்த்துள்ளது. பிரபல ஸ்ட்ரீமிங் தளம் Amazon Prime Video, இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை சுமார் ரூ.160 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக ‘ஜெயிலர்’ முதல் பாகத்தின் ஓ.டி.டி உரிமம் ரூ.100 கோடிக்கு விற்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை ஒப்பிடுகையில், இரண்டாம் பாகத்தின் விலை அதிகரித்திருப்பது அதன் மீதான எதிர்பார்ப்பையும், மார்க்கெட் மதிப்பையும் வெளிப்படுத்துகிறது. மொத்தத்தில், ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரிய அளவில் பேசப்படும் படமாக மாறியுள்ளது.
Listen News!