• Jul 01 2025

அஷ்வத்- கண்மணி வீட்டில் விசேஷம்..! வெளியான குட்நியூஸ் இதோ!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமான பெயராக மாறியிருக்கிறார் நடிகை கண்மணி மனோகரன். 'பாரதி கண்ணம்மா' தொடரில் அஞ்சலி என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற கண்மணி, தனது இயல்பான நடிப்பால் குடும்ப ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியிருந்தார். அந்த தொடர் முடிவடைந்த பின்னரும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அமுதாவும் அன்னலட்சுமியும்’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இந்நிலையில், சன் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளரான அஷ்வத்தை கண்மணி காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்தத் தம்பதிக்கு புதிய நிலை தொடங்கியுள்ளது. அதுஎன்னவென்றால், அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.


இந்த அழகான ஜோடி, கடந்த சில வருடங்களாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கியூட்டான போஸ்ட்டினைப் பகிர்ந்து வந்தது அனைவரும் அறிந்தது. அந்தப் பயணத்தின் இனிய அத்தியாயமாக, தற்போது ஒரு புது பிறவி இவர்களின் வாழ்க்கையை சிறப்பாக்கியுள்ளது. கண்மணி மற்றும் அஷ்வத் இருவரும் தங்களது Instagram பக்கத்தில் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளனர்.

Advertisement

Advertisement