• Jun 24 2025

90 கோடிக்கு தொடங்கிய "குபேரா".. இப்போ 150 கோடி! ஜெட் வேகத்தில் எகிறும் தனுஷின் மார்க்கெட்!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனுஷ் என்ற பெயர், பல பரிமாணங்களில் பேசப்படுகின்றது. நடிப்புத் திறமை, சர்வதேச அளவில் கிடைக்கும் கவனம், இசை அறிவு மற்றும் தயாரிப்பு துறை என அனைத்து தளங்களிலும் மிளிரும் தனுஷ், தற்போது நடித்து வரும் மிக முக்கியமான மற்றும் பிரமாண்டமான திரைப்படம் "குபேரா".


இந்தப் படம் தற்போது தயாரிப்புச் செலவுகள், மார்க்கெட் விபரம், ஓடிடி பிஸ்னஸ் எனப் பல காரணங்களால் திரையுலகத்தில் மிகப்பெரிய சப்ஜெக்ட்டாக மாறியுள்ளது. குறிப்பாக, படத்தின் மொத்த செலவு தற்போது 150 கோடிக்கு மேல் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குபேரா படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பத்தில் பட்ஜெட் 90 கோடி என நிர்ணயித்திருந்தது. ஆனால் படப்பிடிப்பின் போதும், பின்னணி வேலைகளின் போதும், பிஆர்ஒ, விசுவல் எஃபெக்ட்ஸ் போன்ற காரணங்களால் இந்த செலவு 120 கோடிக்கு அதிகரித்தது.


இதிலும் பெரும் பரபரப்பாக இருக்கும் செய்தி என்னவென்றால், வட்டியுடன் சேர்க்கப்பட்டுள்ளதன் மூலம் தற்போது மொத்த தயாரிப்பு செலவு 150 கோடி வரை சென்று விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலைமை, தனுஷ் நடிக்கும் படங்களில் இதுவரை இல்லாத அளவிலான உயர் மதிப்பீட்டைக் காட்டுகின்றது.

தற்போது படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, "குபேரா" படம் ஜூன் 20ஆம் திகதி உலகமெங்கும் வெளியிடப்படவுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பெரிய அளவில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.

படம் ரிலீஸாகும் முன்பே, ஓடிடி உரிமைகள் மட்டும் 47 கோடிக்கு விற்பனையாகி விட்டது என்பது ஒரு முக்கியமான வியாபார அம்சமாகும். இந்த அளவிலான ஓடிடி ஒப்பந்தம், தனுஷ் நடிக்கும் படங்களுக்கான விளம்பர பெறுமதியை, அதேசமயம் படத்தின் குவாலிட்டியையும் வெளிக்கொணர்ந்துள்ளது.

Advertisement

Advertisement