• Jan 18 2025

மூளையில் கட்டியுள்ள சிறுவனுக்கு ஒன்லைன் மூலம் உதவி செய்த ஜி.வி பிரகாஷ்... பாராட்டி வரும் இணையவாசிகள்... முழுவிபரம் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல இசையமைப்பாளரும் , நடிகருமான ஜி.வி பிரகாஷ் ஒரு வயது சிறுவனுக்கு ஒன்லைன் மூலம் உதவி செய்துள்ளார். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


டுவிட்டர்வாசி ஒருவர் தனது சமூகவலைத்தளம் பக்கத்தில் ஓன்லைனினில் பணம் கேற்பதற்கு பயமாக இருக்கிறது இருந்தாலும் கேற்கிறேன். எனது அக்கா பையனுக்கு ஒரு வயது . சிறுமூளை பக்கத்துல கட்டி இருக்குனு சொல்லுறாங்க கொஞ்சம் பயம்தான் இருக்கு நேற்று ராம்நாட்ல இருந்து மதுரை ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போனோம் என தனது சோகமான பதிவை போஸ்ட் செய்துள்ளனர்.


இதனை டுவிட்டர் வலைதளத்தில் பார்த்த ஜி .வி பிரகாஷ்  சிறுவனின் மூளைக்கு அருகில் இருக்கும் கட்டியை அகற்ற மருத்துவத்திற்கு ஆன்லைனில்  பண உதவி கோரிய நபருக்கு ரூ.75,000 அனுப்பி உதவி கரம் நீட்டி எனது தரப்பில் இருந்து சிறிய உதவி என தெரிவித்து உதவி செய்துள்ளார். இந்த விடையத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். 


Advertisement

Advertisement