• Dec 01 2022

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மஹேஸ்வரி வெளியிட்ட முதல் வீடியோ... எவிக்சன் பற்றி அவரே கூறிய பதில் இதோ..!

Listen News!
Prema / 2 weeks ago
image
Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில், சீசன் 6ஆனது தற்போது 6ஆவது வாரத்தில் வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்திருக்கின்றது. அத்தோடு இந்நிகழ்ச்சியானது தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.

21 போட்டியாளர்களுடன் அட்டகாசமாக ஆரம்பமான இந்த நிகழ்வில் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். அந்தவகையில் நேற்றைய தினம் யார் வெளியேறுவார் எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். 


இதில் ராம் அல்லது மஹேஸ்வரி தான் வெளியேறுவார்கள் என்று மக்களால் ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மஹேஸ்வரி குறைந்து வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். அதாவது ஷாந்தி, அசல் கோளார், ஷெரினாவை தொடர்ந்து நான்காவது போட்டியாளராக மஹேஸ்வரி எவிக்ட் செய்யப்பட்டுள்ளார். 


இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த மஹேஸ்வரி தன்னுடைய முதல் வீடியோவினை ரசிகர்களுக்கு பகிர்ந்திருக்கின்றார். அதில் அவர் கூறுகையில் "எனக்கு சப்போர்ட் பண்ணிய உங்கள் எல்லோருக்குமே என்னுடைய நன்றிகள், நான் வெளியேறியது பற்றிக் கொஞ்சம் கூட பீல் பண்ணவில்லை. இதேபோன்று  எப்போதுமே லவ் கொடுத்திட்டு இருங்க" எனக் கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ..!