• Mar 29 2024

அய்யோ இவங்களா! பிக்பாஸ் 6ல் இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் யார் தெரியுமா?- வெளியாகிய முதலாவது ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. 35 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் நேற்று விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டதோடு தற்பொழுது 16 போட்டியாளர்களே மீதமாக உள்ளனர்.

மேலும் நேற்றைய தினம் தனலக்ஷ்மி பணத்தை கல்லாப்பெட்டியில் வைக்காமல் ஒழித்து வைத்ததை கமல் சேர் சுட்டிக் காட்டியிருந்தார்.மேலும் இவ்வாறான சுரண்டல் பிக்பாஸ் வீட்டுக்குள் மட்டுமல்ல வெளியிலும் நடக்கக் கூடாது நேர்மையாக இருக்க வேண்டும் என்பதனை கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் நாமினேஷன் ஆரம்பித்து விட்டது.அதில் நிவாஷினி, அசீம், ஜனனி, ஆயிஷா, தனலக்ஷ்மி ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதனால் இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றது.


Advertisement

Advertisement

Advertisement