• Dec 14 2025

அஜர்பைஜானில் இருந்து பறந்து வந்த அஜித்... விடாமுயற்சி முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவு... வைரல் புகைப்படம் இதோ....

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி.லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியுள்ளனர்.  இந்நிலையில், பல மாதங்களுக்குப் பின்னர் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியுள்ளது. 


மகிழ் திருமேனி தனது டீமுடன் அசுர வேகத்தில் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் போல குறைந்த நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க மகிழ் திருமேனி முடிவு செய்துள்ளாராம். முன்னதாக வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்த ஹுமா குரேஷி, தற்போது விடாமுயற்சி படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 


தற்போது விடாமுயற்சிபடத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு  முடிவடைந்த நிலையில் அஜர்பைஜானில் இருந்து சென்னைக்கு திரும்பினார் நடிகர் அஜித்குமார். அவர் விமானநிலையத்தில் வந்து இறங்கிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது


Advertisement

Advertisement