• Jun 16 2026

‘டார்லிங்’ பூங்கொத்தை நிராகரித்த முதலமைச்சர் விஜய்.! ஷாக்கில் நின்ற விஷால்...

shali / 1 hour ago

Advertisement

Listen News!

நடிகர் விஷால், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சரான விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சந்திப்பு குறித்து விஷால் தனது சமூக வலைத்தளப் பதிவில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில், லயோலா கல்லூரி காலம் முதல் விஜய்யை “டார்லிங்” என்றே அழைத்து வருவதாகவும், இன்று அவர் முதலமைச்சராக உயர்ந்திருந்தாலும் அந்த அன்பும் எளிமையும் மாறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். வளர்ந்து வரும் நடிகராக இருந்த காலத்திலிருந்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அடைந்து, பின்னர் மாநிலத்தின் உயர்ந்த பொறுப்பை ஏற்றவராக விஜய்யின் பயணத்தை நேரில் பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், சந்திப்பின் போது வழக்கமாக வழங்கப்படும் பூங்கொத்து மற்றும் பொன்னாடையை ஏற்காமல், அதற்கான செலவை பொருளாதார வசதி குறைந்த மூன்று பெண் குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்துமாறு விஜய் கூறியதாக விஷால் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அந்த உதவி விஜய்யின் பெயரில் வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

விஜய்யின் புதிய பொறுப்புக் காலத்தில் தமிழகத்திற்கு வளர்ச்சியும் நேர்மறை மாற்றங்களும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்தியுள்ள விஷால், தனது உள்ளத்தில் இருக்கும் ரசிகன் என்றும் மாறமாட்டான் எனவும் தெரிவித்துள்ளார். இந்த பதிவு மற்றும் சந்திப்பு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.


Advertisement

Advertisement