ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹாப்பி ராஜ்’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற PREVIEW SHOW மூலம் படம் முதன்முதலாக திரையிடப்பட்ட நிலையில், அதற்கு கிடைத்த வரவேற்பு படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

படத்தை பார்த்தவர்கள் கூறுவதாவது, ‘ஹாப்பி ராஜ்’ திரைப்படத்தின் முதல் பாதி மிகவும் ஜாலியான, நகைச்சுவை நிறைந்த அனுபவமாக அமைந்துள்ளதாகவும், இரண்டாம் பாதி முழுக்க முழுக்க உணர்ச்சிகளை தூண்டும் வகையில் நகர்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, படத்தின் கடைசி 20 நிமிடங்கள் ரசிகர்களை ஆழமாக பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், அந்த பகுதியில் நடிகை மரியா ஜார்ஜ் தனது நடிப்பால் அனைவரையும் கலங்க வைத்துவிட்டார் என்றும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மேலும், இந்த படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையையும் பலர் வெளிப்படுத்தியுள்ளனர். படம் வெளியாவதற்கு முன்பே இவ்வாறு நல்ல விமர்சனங்களைப் பெறுவது, படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இது படக்குழுவிற்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது.
இந்த காதல் மற்றும் உணர்ச்சி கலந்த நாடகப்படத்தில், ஸ்ரீ கௌரி பிரியா கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதேசமயம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு ஈர்ப்பாக உள்ளது. ‘ஹாப்பி ராஜ்’ திரைப்படம் மார்ச் 27, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Listen News!